ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமந் மஹாபூர்ண குரவே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஶ்ரீமத் வரவரமுநயே நம:
கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தானத்தின் மூலமாக பகவத் பாகவத ஆசாரியர்களின் அனுக்கிரஹத்தாலும் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் சுவாமியின் மங்களாசாசனத்தாலும் கிராமப்புறத்தில் உள்ள நம் குழந்தைகளுக்கு சனாதன ஹிந்து தர்மத்தைக் கொண்டு சேர்க்கும் முக்கியமான தொண்டு நடைபெற்று வருகின்றது.அதன்படி கடந்த மார்கழி மாதம் பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களிலும் ராமானுஜ கூடங்களிலும் பள்ளிகளிலும் சென்று ஆண்டாளின் வைபவத்தை எடுத்துக்கூறி திருப்பாவை பாசுரங்களை கற்றுக் கொடுத்தோம். தற்போது கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தானத்தின் மூலமாக பகவத் பாகவத ஆசாரியர்களின் அனுக்கிரஹத்தாலும் வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் சுவாமியின் ஆசீர்வாதத்தாலும் ஆழ்வார்களின் தமிழ் வேதம் என்ற பாடத்திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஐந்து நிலைகளாக பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
1. அறிவோம் நம் ஆழ்வாரை.
2. பல்லாண்டு பாடுவோம்.
3. திருவரங்கனை திருப்பள்ளியுணர்த்துவோம்.
4. அரங்கனின் அழகை அனுபவிப்போம்.
5. பாவையை போற்றுவோம்.
மேற்கண்ட நிலைகளில் கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், திருப்பாவை ஆகிய பிரபந்தங்களின் சந்தை வகுப்பும் எளிமையான அப்பாசுரார்த்தங்களையும், திவ்யதேச வைபவங்களையும் அனுபவிக்கப் போகிறோம்.
ஆகவே அடியார்கள் அனைவரும் இந்த பாடத்திட்டத்தில் பங்குகொண்டு அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவருளுக்குள்ளாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Students of Arivom Nammazhvarai chanting “Kanninun Sirithambhu”
“குழல் இனிது யாழ் இனிது என்ப-தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் “ என்னும் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்றார்போல் இரண்டரை வயது ஆன குழந்தை எதிராஜன் மிகவும் அற்புதமாக ஆழ்வாருடைய பாசுரங்களை சேவிக்கின்றான். மேன்மேலும் அந்த குழந்தையும் ஆச்சாரியன் அனுக்கிரகத்தால் நாலாயிர பாசுரங்கள் பூர்த்தியாக பயின்று சிறக்க வேண்டும் என்று ஆச்சாரியன் திருவடிகளில் நின்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குழந்தைகளை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கு அடியேனுடைய நன்றிகளை தெரிவித்து அவர்களுக்கும் பல்லாண்டு…